அரசுத் தேர்வுகள் இயக்ககம் Directorate of Government Examinations
புலப்பெயர்ச்சிச்சான்றிதழ் வழங்குதல்:-
- அரசுத் தேர்வுகள் இயக்ககத்தால் நடத்தப்படும் 10 மற்றும் 12-ஆம் வகுப்புக்கான பொதுத் தேர்வுகளில் தேர்ச்சி பெற்று பிற மாநிலங்களில் மேற்படிப்பைத் தொடர விரும்பும் மாணவர்களுக்குப்புலப்பெயர்ச்சிச் சான்றிதழ் வழங்கப்படுகிறது. இது (MIGRATION CERTIFICATE), நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்துடன், பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் இவ்வலுவலகத்தில் பெறப்பட்ட 5 தினங்களுக்குள் வழங்கப்படுகின்றது.
மதிப்பெண் சான்றிதழ்களின் சான்றிட்ட நகல் வழங்குதல் :-
- அரசுத் தேர்வுகள் இயக்ககத்தால் வழங்கப்படும் மதிப்பெண் சான்றிதழ்களைத்தவறவிடும் தேர்வர்களுக்கு மதிப்பெண் சான்றிதழ்களின் சான்றிட்டமதிப்பெண் நகல்(CCM) மற்றும் மறுபிரதி மதிப்பெண் சான்றிதழ் (Duplicate) நிர்ணயிக்கப்பட்ட கட்டணம் பெறப்பட்டு வழங்கப்படுகிறது. விண்ணப்பத்தினை இணையதளம் வாயிலாக பதிவிறக்கம் செய்து கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது.
மறுபிரதி மதிப்பெண் சான்றிதழ்களின் சான்றிட்ட நகல் வழங்குதல் :-
மதிப்பெண் சான்றிதழ்களின் உண்மைத்தன்மை வழங்குதல்:-
- ஆன்-லைன் வாயிலாகவும் மதிப்பெண் பதிவேடுகளுடன் ஒப்பிட்டுப்பார்த்தும் தற்சமயம் மதிப்பெண் சான்றிதழ்களின் உண்மைத்தன்மை குறித்த அறிக்கை வழங்கப்பட்டு வருகிறது.